/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி அலுவலகம் முற்றுகை விருத்தாசலம் அருகே பரபரப்பு
/
ஊராட்சி அலுவலகம் முற்றுகை விருத்தாசலம் அருகே பரபரப்பு
ஊராட்சி அலுவலகம் முற்றுகை விருத்தாசலம் அருகே பரபரப்பு
ஊராட்சி அலுவலகம் முற்றுகை விருத்தாசலம் அருகே பரபரப்பு
ADDED : ஆக 01, 2024 06:55 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நுாறு நாள் திட்ட பெண் பணியாளரை தாக்க முயன்றதாக கூறி, கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை ஊராட்சியில் உள்ள ஏரியில் 100 நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் துார்வாரும் பணி நடந்தது. இந்நிலையில், நேற்று மாலை 3:00 மணியளவில், நுாறு நாள் திட்டப் பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பணியை பார்வையிட வந்த திட்ட பொறுப்பாளர் ஒருவர், அங்கிருந்த பணித்தளப் பொறுப்பாளர் மஞ்சுளா என்பரை திட்டி, தாக்க முயற்சித்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
அவர்களை சமாதானம் செய்த போலீசார், இது தொடர்பாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.