/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 20, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: மேல் புவனகிரி ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில் நடந்தது.
ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர் வரவேற்றார். பொருளாளர் பாலமுருகன், நிர்வாகிகள் ஐஸ்வர்யா, அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினார்.
கூட்டத்தில், ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் ரவி, இளங்கோவன் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.

