/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி செயலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
ஊராட்சி செயலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்ட, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில். ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் தொன் போஸ்கோ தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
மாவட்ட நிர்வாகிகள் கருணாமூர்த்தி, கண்ணன், திருவேங்கடம், சீதாராமன், ரெங்கசாமி, சேகர், வேல்முருகன், ஜெய்சங்கர், பாலமுருகன், மணிவாசகம், நிலவழகன், கவுரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.