ADDED : செப் 18, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள நல்லுார் மற்றும் மங்களூர் ஒன்றியங்களில் 130 ஊராட்சிகளும், 50 துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, ஆண்டுதோறும் ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், புதிய திட்டப்பணிகள் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதனை, பேரிடர் கால செலவிற்கும் ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடியவுள்ளதால், சில மாதங்களுக்கு முன் ஒதுக்கீடு செய்த நிதியை, புதிய திட்டப்பணிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இதனால், ஊராட்சி தோறும் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கூட நிதியின்றி காலியாக உள்ளது.
பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில் ஊராட்சிகளில் பேரிடர் நிதி அவசரகால நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.