/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மலையாண்டவர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம்
/
மலையாண்டவர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம்
ADDED : மார் 25, 2024 05:38 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் 1008 பால்குட அபிஷேகம் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 1008 பால்குட அபிஷேகம் மற்றும் 108 காவடி அபிஷேகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று 24ம் தேதி காலை 9:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலிருந்து பக்தர்கள் பால்குடங்களையும்,கெடிலம் ஆற்றிலிருந்து 108 காவடி களையும் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
காவடிகள் மற்றும் பால்குடங்கள் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு பால்குட அபிஷேம் மற்றும் காவடி அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. காலை 11:30 மகா தீபாராதனை நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.

