/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதவிக்கு வர உழைப்பு தேவை பன்னீர்செல்வம் பேச்சு
/
பதவிக்கு வர உழைப்பு தேவை பன்னீர்செல்வம் பேச்சு
ADDED : ஆக 25, 2024 05:59 AM
சிதம்பரம்: கடும் உழைப்பு இருந்தால்தான் பதவிக்கு வர முடியும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
சிதம்பரத்தில் நடந்த கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சுப்போட்டியை துவக்கி வைத்து அவர் பேசியதாவது:
எனக்கு ஆரம்பத்தில் மேடையில் அதிகம் பேச்சு வராது. ஆனால், செயல்பாடு உண்டு. சிலர் நல்லா பேசுவார்கள். ஆனால் செயல்பாடு இருக்காது. பேச்சாளராக இருந்தால் மட்டும் போதாது, செயலிலும் தீவிரம் காட்ட வேண்டும்.
பொறுப்பிற்கு ஏற்றவாறு, கடுமையாக உழைத்தால்தான் பதவிக்கு வர முடியும். சிலரிடம் உழைப்பு இருக்கும் பேச்சு இருக்காது. சிலரிடம் பேச்சு இருக்கும் உழைப்பு இருக்காது. இந்த இரண்டையும் சேர்த்தால்தான் அரசியலில் முன்னேற முடியும்.
உதயநிதி உழைப்பினால் இளைஞரணி செயலாளராகி, அமைச்சராகி உள்ளார். எதிர்காலத்தில் தலைவராக உயர வாய்ப்பு உள்ளது. நான் உணர்வுப்பூர்வமாக உழைப்பவன். அந்த குணாதிசியத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியாது.

