/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
/
பண்ருட்டி சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது
ADDED : ஜூலை 31, 2024 03:53 AM

கடலுார் : பண்ருட்டி சாராய வியாபாரியை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 3ம் தேதி ரெய்டு மேற்கொண்டனர்.
அப்போது, வி.பெத்தாங்குப்பத்தில் சாராயம் விற்ற அதேபகுதியை சேர்ந்த செல்வம் மகன் ரஞ்சித்,28; என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
அவர் மீது 8 சாராய வழக்குகள் உள்ளதால், அவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, ரஞ்சித்தை தடுப்பு காவலில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள ரஞ்சித்திடம் நேற்று போலீசார் வழங்கினர்.