/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிரிக்கெட் போட்டியில் பண்ருட்டி அணி அசத்தல்
/
கிரிக்கெட் போட்டியில் பண்ருட்டி அணி அசத்தல்
ADDED : ஆக 29, 2024 07:49 AM

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகையில், டீம் டெஸ்ட்ராயிங் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஏராளமான அணிகள் பங்கேற்று விளையாடின.
கடந்த 10ம் தேதி துவங்கிய போட்டி, 25 ம் தேதி வரையில் நடத்தப்பட்டது. இறுதி போட்டியில், பண்ருட்டி அணி முதல் பரிசையும், திருவதிகை அணி இரண்டாம் பரிசையும் பெற்றது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் முதல் பரிசு பெற்ற பண்ருட்டி அணிக்கு ரூ.10 ஆயிரம், 2ம் இடம் பிடித்த திருவதிகை அணிக்கு 8000 ரூபாய் பரிசு தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கதிர்காமன், கவுரிஅன்பழகன், சண்முகவள்ளிபழனி, விவசாய அணி துணை அமைப்பாளர் எழுமலை, நகர இளைஞரணி சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

