ADDED : மே 03, 2026 05:30 PM
வடலுார்: வடலுார் உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவம், போலீசார் அணிவகுப்பு சென்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் பணி இன்று நடைபெறுவதை முன்னிட்டு சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, துணை ராணுவம் மற்றும், போலீசார் அணிவகுப்பு சென்றனர். எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் துணை ராணுவ படையை சேர்ந்தோர் வடலுார், குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி காவல் நிலைய போலீசார் என மொத்தம், 100 பேர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். வடலுாரில் பண்ருட்டி சாலை முதல், நான்கு முனை சந்திப்பு வரையிலும், குறிஞ்சிப்பாடியில் போலீஸ் ஸ்டேஷன் முதல் மீனாட்சிப்பேட்டை வரையிலும், குள்ளஞ்சாவடியில் ரயில்வே பாதை முதல் கடை வீதி வரையிலும் இந்த அணிவகுப்பு நடந்தது.
நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், வடலுார் இன்ஸ்பெக்டர் சுரேஷ், குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
