/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகன் இறப்பில் சந்தேகம் கலெக்டரிடம் பெற்றோர் மனு
/
மகன் இறப்பில் சந்தேகம் கலெக்டரிடம் பெற்றோர் மனு
ADDED : மார் 11, 2025 04:27 AM

கடலுார் : மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கடலுாரில் நடந்த பொதுமக்கள் குறைக்கேட்புக் கூட்டத்தில் கலெக்டரிடம், பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த கருவேப்பிலம்பாடியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மற்றும் உறவினர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
எனது மகன் கலையரசனுக்கும், 30; பக்கத்து ஊரான ஆடூர் அகரத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகள் முத்துலட்சுமிக்கும் கடந்த ஜனவரி 26ம் தேதி திருமணம் நடந்தது.
முத்துலட்சுமியின் நடத்தை குறித்து அவரது உறவினர்களிடம் கலையரசன் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முத்துலட்சுமியின் உறவினர்கள் கலையரசனை கட்டி வைத்து தாக்கி, நீயே விஷம் குடித்து இறந்து போ என மிரட்டியுள்ளனர்.
அதனால் எனது மகன் கலையரசன் பூச்சி மருந்து குடித்து இறந்தார். எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. பெண்ணின் உறவினர்கள் மிரட்டியதால் தான் விஷம் குடித்து இறந்தார். அதனால் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.