ADDED : மார் 31, 2024 04:19 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் கட்சி அலுவலகங்கள் இல்லாததால் கட்சியினர் தேர்தல் சமயத்தில் உட்கார இடமில்லாமல் தவிக்கின்றனர்.
நெல்லிக்குப்பத்தில் தி.மு.க.,வுக்கு நிலையான கட்சி அலுவலகம் உள்ளது. இதனால், அக்கட்சியினர் காலை, மாலை நேரங்களில் அங்கு கூடி தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். ஆனால், தேர்தலில் போட்டியிடும் காங்., பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகளுக்கு அலுவலகங்கள் இல்லை. இதனால், கட்சியினர் உட்காரவோ, ஆலோசனை நடத்தவோ இடமின்றி தவிக்கின்றனர். சாலையோரம் நின்று தேர்தல் பணிகள் பற்றி பேச வேண்டிய நிலையில் உள்ளனர்.
தேர்தலுக்கு 18 நாட்களே உள்ள நிலையில் போட்டியிடும் கட்சிகள் சார்பிலும் இதுவரை தேர்தல் அலுவலகங்கள் திறக்கவில்லை. இதனால் கட்சியினர் தேர்தல் பணியில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர்.
