கே.ஒய்.சி., இணைப்பிற்கு பணம் இ.கு.கட்சி கலெக்டருக்கு மனு
கே.ஒய்.சி., இணைப்பிற்கு பணம் இ.கு.கட்சி கலெக்டருக்கு மனு
ADDED : ஆக 20, 2026 04:23 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம், ஆக. 21–
காஸ் சிலிண்டர் இணைப்பில் கே.ஒய்.சி., இணைக்க பெற்ற பணத்தை திரும்ப வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் பாலவீரவேல் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
காஸ் சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள நுகர்வோரின் அடையாளத்தை அறியவும், முறைகேடுகளை தவிர்க்கவும் பயோ மெட்ரிக் முறையில் கே.ஒய்.சி., இணைப்பதை கட்டாயாம் ஆக்கியுள்ளனர். நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியில் எரிவாயு நிறுவன ஏஜென்ட் மூலம் இப்பணி நடந்தது. இதற்காக ஒவ்வொரு நுகர்வோரிடமும் ரூ.236 வசூலித்துள்ளனர். . அதற்கான ரசீது வழங்கவில்லை. இதுபோல் பணம் வசூலிக்க அரசு கூறியுள்ளதாக தெரியவில்லை.
எனவே, காஸ் நுகர்வோரிடம் வசூல் செய்த பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
