ADDED : ஜூன் 27, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டப் பேரவை கூட்டம் நடந்தது.
வட்ட தலைவர் தனுசு தலைமை தாங்கினார். துணை தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். கடலுார் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் புருேஷாத்தமன் துவக்கவுரையாற்றினார். செயலாளர் ராமதாஸ் வேலை அறிக்கை வாசித்தார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு கம்யூடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 15லிருந்து 12 ஆண்டாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, நிர்வாகிகள் காசிநாதன், பழனி, குழந்தைவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.