/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பென்ஷனர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
/
பென்ஷனர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 15, 2024 11:55 PM

கடலுார்: அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு, கடலுார் மாவட்ட கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடலுாரில் நடந்த கூட்டத்திற்கு, தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். துணைத் தலைவர் பக்கிரி, துணை செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமசாமி துவக்கவுரையாற்றினார். மாநில தலைவர் ராஜகண்ணன், துணைத் தலைவர் சிதம்பரம், மாநில பொதுச்செயலாளர் தங்கராசா, மாநில பொருளாளர் ராமசாமி மற்றும் கருவூல அலுவலர் சுஜாதா உரையாற்றினர்.
இதில், தமிழக அரசு முதியோர் தொழிலகம் துவங்க வேண்டும். கடலுார் மாநகராட்சியில் ஓய்வுபெற்ற துாய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பி.எப்., வட்டி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநகர தலைவர் பக்கிரி நன்றி கூறினார்.