/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி
/
பண்ருட்டி பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி
பண்ருட்டி பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி
பண்ருட்டி பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி
ADDED : மே 01, 2024 07:20 AM

பண்ருட்டி, : பண்ருட்டி பஸ்நிலையத்திற்கு சென்னை- கும்பகோணம், தஞ்சாவூர், பேராவூரணி, நாகப்பட்டினம், சிதம்பரம்,சீர்காழி,காட்டுமன்னார்கோவில், திருச்சி,திருவண்ணாமலை, வேலுார்,சித்துார், பெங்களூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன.
இங்கு வரும் பயணிகளுக்கு குடிநீர் சீராக நகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. பெயரளவில் ஒரு சிண்டெக்ஸ் டேங்க் வைத்துள்ளனர். அந்த தொட்டியில் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்புகின்றனர். மதியத்திற்கு பின்பு குடிநீர் தொட்டியில் தண்ணீர் இருப்பதில்லை.
சிண்டெக்ஸ் டேங்க் நீரை பொதுமக்கள் பலர் பருகுவதில்லை. கை, கால்கள் , முகம் கழுவ மட்டுமே பயன்படுத்துகின்றனர். போலீஸ் புறக்காவல் நிலையம் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதும் இல்லை. எப்போதும் தண்ணீர் இல்லாமல் காட்சி பொருளாகவே உள்ளன. நகராட்சி அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைத்துள்ளனர்.
பஸ் நிலையத்தில் மக்கள் குடிக்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 4,5, இடங்களில் வைத்தால் தொலைத்துாரத்தில் பஸ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட பஸ் நிற்கும் நேரத்தில் குடிநீர் பிடித்து பருகுவர்.
ஆனால் நகராட்சி அதிகாரிகள் பெயரளவிற்கு சிண்டெக்ஸ் தண்ணீர் வைத்துள்ளோம் என கணக்கு காண்பிக்கவே வைத்துள்ளனர். இந்தகோடை வெயிலில் மக்கள் தண்ணீர் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட நகராட்சி முன்வரவேண்டும்.