/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூச்செடி, வாழையில் பூச்சி தாக்குதல் கடலுார் அருகே விவசாயிகள் கவலை
/
பூச்செடி, வாழையில் பூச்சி தாக்குதல் கடலுார் அருகே விவசாயிகள் கவலை
பூச்செடி, வாழையில் பூச்சி தாக்குதல் கடலுார் அருகே விவசாயிகள் கவலை
பூச்செடி, வாழையில் பூச்சி தாக்குதல் கடலுார் அருகே விவசாயிகள் கவலை
ADDED : மார் 03, 2025 07:26 AM

கடலுார் : கடலுார் அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்மங்கியில் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலுார் அடுத்த ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், கொடுக்கன்பாளையம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 ஏக்கரில் சம்பங்கி பூச்செடி சாகுபடி செய்யப்படுகிறது. பூச்செடி வளர்ந்த 6 மாதங்களுக்கு பின் பூக்க துவங்கும்.
விவசாயிகள் பூச்செடி பயிர் செய்து 8 மாதங்கள் ஆகிறது. கடந்த 2 மாதங்களாக பூத்துக்கொண்டிருந்த செடியில் திடீரென வண்டு தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனால் பூச்செடிகள் பூவின் இதழ் மடங்கி காய்ந்து விடுகிறது. விவசாயிகள் பூக்களை அறுவடை செய்து மார்க்கெட்டிற்கு அனுப்ப இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
வாழை: கேப்பர் மலையில் உள்ள 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழை நன்றாக வளர்ந்து 2 மாதங்களுக்கு பின் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாழையின் அடிப்பகுதி வெடிக்கிறது.
இதனால் குலை வருவது தள்ளிப்போவதுடன், குலையும் சிறியதாக வருகிறது. வாழை மரம் மஞ்சள் தோற்றமாக உள்ளது; வளர்ச்சி பாதிக்கிறது. மஞ்சள் நோயை அகற்ற விவசாயிகள் பல மருந்துகள் பயன்படுத்தியும் பலன் தரவில்லை.
கத்தரி: கத்தரி செடி நடவு செய்த 25 நாட்களில் களையெடுக்கப்படும். அவ்வாறு களையெடுத்த பின்பு கத்தரி செடி படிப்படியாக இலை சுருண்டு காய்ந்து வருகிறது.
இலைகள் காய்ந்து செடிகள் பட்டுவிடுவது ஏன் என்பது தெரியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெள்ளம் பாதித்த நிலங்களில் தான் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் எதிர்பார்த்த பலனைதராமல் துவக்க காலத்திலேயே செடிகள் பட்டுப்போவதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பூச்செடி, வாழை, கத்தரி செடிகள் யாவும் பூச்சிக்கள் தாக்குதலால் இப்பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேளாண் துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் சரிவர கிராமங்களுக்குள் சென்று விவசாயிகளை சந்தித்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில்லை.
மேலும் இம்மாவட்ட அமைச்சரும் வேளாண் துறையாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பூச்சித்தாக்குதலில் இருந்து விவசாயிகளை காக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.