ADDED : ஜூன் 03, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடந்தது.
கடலுார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று நேரடி விசாரணை நடத்தினார்.
மேலும், புகார் மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண அறிவுறுத்தினார்.
ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, டி.எஸ்.பி.,க்கள் மற்றும் போலீசார், பொதுமக்கள் பெட்டிஷன் மேளாவில் பங்கேற்றனர்.
