இயக்கப்படாத தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வி.சி.க., மனு
இயக்கப்படாத தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வி.சி.க., மனு
ADDED : செப் 03, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: கிராம பகுதிகளில் இயக்கப்படாத இரண்டு தனியார் பஸ்கள் மீது நடவடிக்கைஎடுக்கக்கோரி வி.சி.க., நிர்வாகிகள் மனு அளித்தனர்.
சிதம்பரம் – புதுச்சத்திரம் மற்றும் பரங்கிப்பேட்டை – குறிஞ்சிப்பாடி மார்க்கத்தில் இரு தனியார் பஸ்கள் வயலாமூர், பூவாலை, அலமேலுமங்காபுரம் , மணிக்கொல்லை, வில்லியநல்லூர் வழியாக இயக்கப்பட்டது.
இந்த இரு தனியார் பஸ்கள் கடந்த மூன்று மாதமாக இயக்கப்படாததால், மேற்கண்ட 5 கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து வி.சி.க., மண்டல செயலாளர் செல்லப்பன் , மாவட்ட செயலாளர் தமிழ்வளவன் மற்றும் நிர்வாகிகள் நேற்று இயக்கப்படாத தனியார் பஸ்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டி, க்கோரி சிதம்பரம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம், மனு அளித்தனர்.
