ADDED : ஜூன் 08, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
கடலுார்: இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி மனு அளித்தனர்.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் அளித்த மனு: கடந்த 2022ம் ஆண்டு கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2,236 பேர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் தற்போது எந்த அறிவிப்பும் இன்றி இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே தங்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
