/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கனவு இல்ல திட்டத்தில் வீடு கோரி மாற்றுத் திறனாளிகள் மனு
/
கனவு இல்ல திட்டத்தில் வீடு கோரி மாற்றுத் திறனாளிகள் மனு
கனவு இல்ல திட்டத்தில் வீடு கோரி மாற்றுத் திறனாளிகள் மனு
கனவு இல்ல திட்டத்தில் வீடு கோரி மாற்றுத் திறனாளிகள் மனு
ADDED : ஆக 06, 2024 07:05 AM

கடலுார் : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அளித்து சொந்த வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் மனு அளித்தனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் சிகரம் மாற்றுத் திறனாளிகளின் மாற்றத்திற்கான சங்கத்தினர் அளித்த மனு:
கடலுார் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த இடம், வீடு இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதன் விளைவாக கடந்த 2022ம் ஆண்டு 150க்கும் மேற்பட்டோருக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டது.ஆனால் அந்த மனைப் பட்டா வழங்கியும் எந்த பயனும் இல்லாமல், மக்கள் வசிக்க முடியாத இடமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சொந்த வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.