/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு நத்தவெளி பகுதி மக்கள் மனு
/
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு நத்தவெளி பகுதி மக்கள் மனு
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு நத்தவெளி பகுதி மக்கள் மனு
இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு நத்தவெளி பகுதி மக்கள் மனு
ADDED : ஆக 20, 2024 12:14 AM

கடலுார்: இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் பாதிரிக்குப்பம் நத்தவெளி சாலை பொதுமக்கள் கொடுத்துள்ள மனு:
நாங்கள் 74 குடும்பங்கள் பாதிரிக்குப்பம் ஊராட்சி இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தோம். கடந்த 2018ம் ஆண்டு நெடுஞ்சாலை துறை மூலம் எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டது. இதையடுத்து, சாலையோரத்தில் மழை, வெயில் காலங்களிலும், குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பின்றி வசித்து வருகிறோம்.
எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு கடந்த 7 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.
எனவே, அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.