/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டுமனை பட்டா கேட்டு பெத்தாங்குப்பம் மக்கள் மனு
/
வீட்டுமனை பட்டா கேட்டு பெத்தாங்குப்பம் மக்கள் மனு
ADDED : ஜூன் 25, 2024 07:28 AM

கடலுார், : அரசின் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் அடுத்த பெத்தாங்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
நாங்கள் பல ஆண்டுக ளாக வீடுகட்டி வசித்து வரும் இடத்திற்கு வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அதன் படி, ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்து பட்டா வழங்க ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர், அதிகாரிகள் உதவியுடன் முத்துமாரியம்மன் கோவில் சுற்றி வழிபாட்டிற்காக உள்ள காலி இடங்கள் மற்றும் குளத்தை பட்டா வாங்க முயன்றனர்.
இதையறிந்த கிராம மக்கள் அந்த இடத்திற்கு பட்டா வழங்கக்கூடாது என தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து, எங்களுக்கு வழங்க வேண்டிய பட்டாவையும் சேர்த்து அதிகாரிகள் நிறுத்தி வைத் துள்ளனர்.
எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.