/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'சிதம்பர ரகசியம்' காட்ட வேண்டி மனு
/
'சிதம்பர ரகசியம்' காட்ட வேண்டி மனு
ADDED : மார் 03, 2025 06:32 AM
சிதம்பரம் : சிதம்பர ரகசியத்தை காட்ட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெய்வீக பக்தர் பேரவை தலைவர் ஜெமினி ராதா, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் அளித்த மனு;
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜை நடந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு வரை, கனகசபையில் (சிற்றம்பலம்) இரு வாயில்கள் வழியாக பக்தர்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்து வந்தனர். அது தற்போது, பக்தர்களுக்கு ஒரு வாயிலில் மட்டுமே அனுமதி வழங்கப்பப்படுகிறது. அதேபோல், 2015ம் ஆண்டு வரை பக்தர்களுக்கு 'சிதம்பர ரகசியம்' காட்டப்பட்டது. அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மீண்டும் இரு வழியிலும் பக்தர்களை வழிபட அனுமதிக்க வேண்டும். வழக்கத்தில் இருந்த, 'சிதம்பரம் ரகசியத்தை மீண்டும் காட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.