/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணக்குப்பம், பொன்னியாங்குப்பம் மக்கள் கலெக்டரிடம் மனு
/
மணக்குப்பம், பொன்னியாங்குப்பம் மக்கள் கலெக்டரிடம் மனு
மணக்குப்பம், பொன்னியாங்குப்பம் மக்கள் கலெக்டரிடம் மனு
மணக்குப்பம், பொன்னியாங்குப்பம் மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 20, 2024 12:13 AM
கடலுார்: பச்சையாங்குப்பத்தில் இருந்து மணக்குப்பம், பொன்னியாங்குப்பத்தை பிரிக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் அடுத்த மணக்குப்பம், பொன்னியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு:
பச்சையாங்குப்பம் ஊராட்சியில் உள்ள மணக்குப்பம், பொன்னியாங்குப்பம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். 300க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இதர வருமானம் அளிக்கும் தொழில் எதுவும் கிடையாது. கிராமங்களில் குடிநீர் வசதி, போதுமான சாலை வசதி இதுவரை இல்லை. இந்நிலையில், எங்கள் கிராமத்தை தற்போது மாநகராட்சியில் இணைக்கப்பட உள்ள பச்சையாங்குப்பம் ஊராட்சியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும் விவசாயக் கூலியான எங்களுக்கு நுாறு நாள் வேலை திட்டப் பணிகள் கிடைக்கும்படியும், ஊராட்சி மூலம் அடிப்படை வசதிகள் கிடைக்கவும் மணக்குப்பம், பொன்னியாங்குப்பம் ஆகிய கிராமங்களை பச்சையாங்குப்பம் ஊராட்சியில் இருந்து பிரித்து தனி ஊராட்சியாகவும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.