/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
/
சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
ADDED : ஜூன் 27, 2024 03:11 AM

கடலுார்: நாராயணபுரத்தில் சுடுகாட்டிற்கு பாதை வசதிக்கேட்டு, கடலுார் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கடலுார் மாநகராட்சி வரி மற்றும் வாக்களிப்போர் நல சங்க தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் தலைமையில் கொடுத்துள்ள மனு;
கடலுார் தாலுகா, தென்னம்பாக்கம் பஞ்சாயத்து நாராயணபுரத்தில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதியில்லை.
இதனால், அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக சடலங்களை துாக்கிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். தேவனாம்பட்டினம் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அருகில், பொதுமக்களுக்கு காத்திருப்பு அறை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.