/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 2ம் கட்ட பகுப்பாய்வு
/
கடலுார் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 2ம் கட்ட பகுப்பாய்வு
கடலுார் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 2ம் கட்ட பகுப்பாய்வு
கடலுார் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 2ம் கட்ட பகுப்பாய்வு
ADDED : ஏப் 08, 2024 05:47 AM

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 2ம் கட்ட பகுப்பாய்வு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் கடலுார் லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 2ம் கட்ட பகுப்பாய்வு நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர், அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென், முன்னிலை வகித்தார். பட்டியலில் உள்ளவாறு 3616 பேலட் யூனிட், 1808 கண்ட்ரோல் யூனிட், 1956 விவிபாட் இயந்திரங்களுக்கு 2ம் கட்ட பகுப்பாய்வு செய்து 6 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர்சரண்யா, மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.