/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., கட்சி கொடி அகற்றம் கடலுார் அருகே மறியல்
/
வி.சி., கட்சி கொடி அகற்றம் கடலுார் அருகே மறியல்
ADDED : ஆக 08, 2024 12:17 AM
கடலுார் : கடலுார் அருகே வி.சி., கட்சி கொடியை மர்ம நபர்கள் அகற்றியதை கண்டித்து, அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் வி.சி., கட்சி கொடி கம்பத்தில் இருந்த கொடியை, நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர். மேலும், அப்பகுதி சுவற்றில் இருந்த வி.சி., கட்சி விளம்பரமும் கருப்பு பெயிண்ட் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த, அக்கட்சியினர் கடலுார்-சிதம்பரம் சாலையில் நேற்று காலை 8:00 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
கடலுார் முதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், புகாரின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து, காலை 8:10 மணியளவில் மறியலை கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.