/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு
/
பூப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு
ADDED : ஆக 16, 2024 06:07 AM
கடலுார்: பரங்கிப்பேட்டையில் நாளை மாவட்ட அளவில் பூப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடக்கிறது.
திருவாடுதுறை ஆதினம் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான சப் ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வரும் 30, 31- ஆகிய தேதிகளில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க கடலுார் மாவட்ட அளவிலான பூப்பந்து வீரர்கள் தேர்வு போட்டி மற்றும் மாவட்ட சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை 17ம் தேதி காலை 7:00 மணிக்கு பரங்கிப்பேட்டை பி.எம்.டி., கிளப் மைதானத்தில் நடக்கிறது.
இதில், பங்கேற்க விரும்பும் வீரர்கள் பிறப்பு சான்றிதழ் நகலுடன் ஒரு அணியாக வர வேண்டும். இத்தகவலை மாவட்டத் தலைவர் ராக்கவ் தினேஷ், செயலாளர் திருவிக்ரமன் தெரிவித்துள்ளனர்.

