தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை


ADDED : ஏப் 24, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம் : விருத்தாசலம் அடுத்த காட்டுப்பரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் சினேகா, 17. இவரது தாய், தந்தை இருவரும் போபாலில் தங்கி வேலை பார்த்தபோது, கடந்த 2011ம் ஆண்டு நடந்த விபத்தில் தாய் இறந்து விட்டார். தந்தை போபாலில் வேலை பார்க்கிறார்.

இதனால் சினேகா, பெண்ணாடம் அடுத்த கார்மாங்குடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்வில் தேர்வு எழுதி உள்ளார்.

அதில், சரியாக தேர்வு எழுதவில்லை என தெரிகிறது. குறைவான மதிப்பெண் வரும் என்று நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

இதுகுறித்த புகாரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us