/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு; கடலுாரில் 350 பேர் ஆப்சென்ட்
/
பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு; கடலுாரில் 350 பேர் ஆப்சென்ட்
பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு; கடலுாரில் 350 பேர் ஆப்சென்ட்
பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு; கடலுாரில் 350 பேர் ஆப்சென்ட்
ADDED : மார் 04, 2025 07:08 AM

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 350 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கியது. இம்மாவட்டத்தில் கடலுார் மற்றும் விருத்தாசலம் என இரு கல்வி மாவட்டம் உள்ளது. கடலுார் கல்வி மாவட்டத்தில் 67 தேர்வு மையங்களில் 8676 மாணவர்கள், 9119 மாணவிகள் என மொத்தம் 17,795 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில், 55 தேர்வு மையங்களில் 6273 மாணவர்கள், 6091 மாணவிகள் என 12,364 பேர் என 246 பள்ளிகளைச் சேர்ந்த 30,159 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல் நாளான நேற்று தமிழ் மொழிப் பாடம் தேர்வு நடந்தது.
திருப்பாதிரிபுலியூர் மற்றும் கடலுார் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் உடனிருந்தார்.
நேற்றைய தேர்வில் தொடர் விடுப்பில் இருந்த 73 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தனித்தேர்வு எழுதும் 27 மாணவர்கள், பிரெஞ்ச் மொழி விருப்ப பாடமாக எடுத்த ஒரு மாணவர் உட்பட 350 பேர் ஆப்சென்ட் ஆகினர்.