/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க.,வின் கிளி ஜோசிய கூட்டணி: அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டல்
/
பா.ம.க.,வின் கிளி ஜோசிய கூட்டணி: அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டல்
பா.ம.க.,வின் கிளி ஜோசிய கூட்டணி: அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டல்
பா.ம.க.,வின் கிளி ஜோசிய கூட்டணி: அமைச்சர் பன்னீர்செல்வம் கிண்டல்
ADDED : ஏப் 17, 2024 11:44 PM

வடலுார் : வடலுாரில் தி.மு.க., கூட்டணியின் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து அமைச்சர் பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட வடலுாரில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் 1 லட்சம் ஓட்டுகள் அதிகமாக காங்., வேட்பாளருக்கு கிடைக்க வேண்டும்.
நமது கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆளுக்கு 10 ஓட்டு வாங்கி தர வேண்டும். வடலூரில் சர்வதேச மையம் ரூ.100 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதனால் வள்ளலார் புகழ் உலகம் முழுவதும் பரவ உள்ளது.
தி.மு.க., கூட்டணி நிலையான கூட்டணி, 18 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது .சிலர் நேற்று ஒரு கூட்டணி இன்று ஒரு கூட்டணி என மாறி மாறி வைக்கின்றனர். விஜயகாந்த் மனைவி ஒரு கூட்டணி வைத்துள்ளார். அது பேரத்துக்கான கூட்டணி.
இன்னொரு கூட்டணி இருக்கு அது கிளி ஜோசிய கூட்டணி. பா.ம.க., வில் ஆள் கிடைக்காமல் தங்கர்பச்சானை நிறுத்தியுள்ளனர்.
இது, பணத்திற்கான கூட்டணி. இந்த கூட்டணியை முறியடிக்க வேண்டும்.
இந்த தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை கை சின்னத்தில் ஒட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.
வேட்பாளர் விஷ்ணு பிரசாத் பேசும்போது, 'மத்தியில் ஆளும் மத்திய மோடி அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மகளிர் உரிமை தொகை திட்டம், இலவச பஸ் பாஸ், காலை உணவு திட்டம் என பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது. இத்திட்டங்கள் தொடர கை சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், நாராயணசாமி, வடலூர் சேர்மன் சிவக்குமார், துணை சேர்மன் சுப்பராயலு, வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி சேர்மன் கோகிலா குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

