ADDED : ஆக 01, 2024 07:00 AM

சிதம்பரம்: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவித்தல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவையொட்டி, மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கவிதை ஒப்புவித்தல் போட்டியில், சிதம்பரம் ெஷம்போர்டு பள்ளி மாணவி வர்ஷா சிறப்பிடம் பெற்றார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ( தனியார் பள்ளி ) சாந்தி வாழ்த்தினார். அதேபோல, முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு நாள் விழா, காமராஜர் பிறந்தநாள் விழா போன்ற விழாக்களில் நடைபெற்ற போட்டிகளில் மாணவி வர்ஷா சிறப்பிடம் பெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து பள்ளியில் நடந்த நிகழ்வில். நிறுவனர் விஸ்வநாதன், செயலர் சத்தியபிரியா அரிகிருஷ்ணன் மற்றும் முதல்வர் லதா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.