ADDED : ஆக 18, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் சுதந்திர தின கவியரங்கம் நடந்தது.
மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். வாசகர் வட்டத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். பேராசிரியர் குழந்தைவேலனார் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட நிர்வாகிகள் சொக்கநாதன், ஜானகிராஜா, ராஜதுரை, பால்கி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரவீன் அய்யப்பன் கலந்து கொண்டு பேசினார். பின், சுங்கத் துறை துணை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் 'விடுதலை வேர்கள்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.நுாலகர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

