ADDED : ஜூலை 16, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த விஷ வண்டு கூட்டினை பரங்கிப்பேட்டை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் விஷவண்டு கூடுகட்டி, மாணவர்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு கிராம மக்கள் சார்பில், தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையை அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் பள்ளி வளாகத்தில் இருந்த விஷவண்டு கூட்டினை நேற்று முன்தினம் இரவு எரித்து அழித்தனர்.
இதனால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.
