/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேன் உரிமையாளருக்கு அபராதம் போலீஸ் அதிரடி
/
வேன் உரிமையாளருக்கு அபராதம் போலீஸ் அதிரடி
ADDED : ஜூலை 13, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் வேனில் கூடுதலாக பயணிகளை ஏற்றி வந்ததாக, சுற்றுலா வேன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடலுார், செல்லங்குப்பத்தில் டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த சுற்றுலா வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அனுமதிக்கப்பட்டதை விட வேனில் கூடுதலாக பயணிகளை ஏற்றி வந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து, வேன் உரிமையாளருக்கு, 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.