/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி பணம் தலைமறைவானவரை தேடும் போலீஸ்
/
வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி பணம் தலைமறைவானவரை தேடும் போலீஸ்
வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி பணம் தலைமறைவானவரை தேடும் போலீஸ்
வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி பணம் தலைமறைவானவரை தேடும் போலீஸ்
ADDED : ஆக 13, 2024 11:44 PM

நடுவீரப்பட்டு,:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 32. இவருக்கு முத்தாண்டிக்குப்பம், கனரா வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில், கடந்த ஜூலை மாதத்தில் 2.50 கோடி ரூபாய் வந்தது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கேட்டதற்கு, பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்ததாகவும், அதிலிருந்து பணம் வந்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், அசோக்குமார், தன் வங்கி கணக்கில் இருந்து, 2 கோடி ரூபாயை ஏழு வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பினார். அவரது வங்கி கணக்கில் தற்போது, 50 லட்சம் ரூபாய் உள்ளது.
சந்தேகமடைந்த வங்கி அதிகாரி, அசோக்குமாரின் வங்கி கணக்கை முடக்கியதோடு, இதுகுறித்து கடலுாரில் உள்ள 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளித்தார். தலைமறைவான அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.