/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு கல்லுாரியில் போலீசார் விழிப்புணர்வு
/
அரசு கல்லுாரியில் போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 20, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அரசு கல்லுாரியில், காவல் துறை சார்பில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் சரவணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார்.
புள்ளியியல் ஆய்வாளர் சிவசங்கர், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், சாமிநாதன், ரமேஷ்குமார், தலைமை காவலர்கள் அனிதா, பிரியா, புகழ் செல்வி ஆகியோர் சமூக நீதி, மனித உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு குறித்தும் மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.