/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை கும்பகர்ணன் துாக்கத்தில் போலீசார்
/
கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை கும்பகர்ணன் துாக்கத்தில் போலீசார்
கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை கும்பகர்ணன் துாக்கத்தில் போலீசார்
கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை கும்பகர்ணன் துாக்கத்தில் போலீசார்
ADDED : ஜூன் 11, 2024 11:27 PM
கடலுார் மாவட்டத்தின், கடைகோடி நகரமான காட்டுமன்னார்கோவிலை சுற்றி 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இப்பகுதி உள்ளது. இங்கு போதைக்கு குறையில்லை, என்ற வகையில், 24 மணி நேரமும் சரக்கு விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. இரவு, குவாட்டர் அடித்து, துாங்கும் குடி பிரியர்கள் திடீரென போதை தெளிந்து மீண்டும் 2 மணிக்கு எழுந்து சென்றாலும், பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, சரக்கு வாங்கி அடிக்கலாம்.
அந்த அளவிற்கு போலீசார் செயல்பாடு உள்ளது. அதுமட்டுமில்லாம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை பகுதியில் கஞ்சா கிடைக்காத இடமில்லை என கூறலாம். அந்த அளவிற்கு பள்ளி கல்லுாரி மாணவர்களை கஞ்சா போதை சீரழித்து வருகிறது.
போதைதான் நகரத்தை பிரதானமா என்றால், அதை கடந்த விவசாய கூலி தொழிலாளர்களையும், தினக்கூலி தொழிலாளர்களையும் லாட்டரி விற்போர் விடுவதில்லை. காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 8 க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு, 5 லட்சம் வரை, லாட்டரி விற்பனை நடைபெறுவதாக சமூக ஆர்வலர் ஒருவர் வேதனையோடு தெரிவிக்கிறார். லாட்டரி விற்பனையால் ஏழை எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பல ஆயிரங்களை இழந்து வருகின்றனர்.
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் காட்டுமன்னார்கோவில் போலீசாரோ குறட்டை விட்டுக்கொண்டிருக்கின்றனர். இதனை கண்டிக்க வேண்டிய, சரக அதிகாரியோ, அவர்களை விட, ஆழ்ந்த துாக்கத்தில் இருந்து வருவதுதான் வேடிக்கையாக உள்ளது.
மாவட்ட காவல் துறை, நேரடியாக களத்தில் இறங்கி, அதிரடி ஆட்டம் ஆடினால் மட்டுமே, மாவட்டத்தின் கடைகோடி நகரை காப்பாற்ற முடியும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.