/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணை
/
பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணை
ADDED : மார் 03, 2025 07:26 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50. இவரது மனைவி ஜெயக்கொடி, 45. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களின் 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், தம்பதியினர் தனியாக வீட்டில் வசித்தனர்.
நேற்று காலை ஜெயக்கொடி தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் பிரேதத்தை அடக்கம் செய்யும் சடங்குகளை செய்து வந்தனர்.
இந்நிலையில், ஜெயக்கொடியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு புகார் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார், ஜெயக்கொடி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.