/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏ.டி.எம்., மையம் குறித்து வந்த மர்ம போன் போலீஸ் விசாரணை: பாலுாரில் பரபரப்பு

ADDED : மே 03, 2024 11:41 PM

நடுவீரப்பட்டு, - பாலூர் ஏ.டி.எம்.,கதவு உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம போனால் பதட்டம் ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த பாலுாரில் கனரா வங்கி உள்ளது. இதன் வெளியில் வங்கியின் ஏ.டி.எம்.,உள்ளது. இந்த ஏ.டி.எம்.,மின் கதவு உடைக்கப்பட்டு, திறந்தநிலையில் உள்ளதாக நேற்று காலை 6:00 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. உடன் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏ.டி.எம்.,மெஷினை ஆய்வு செய்தனர்.பின்பு வங்கி மேலாளர் கோபிசங்கருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து, வங்கி மேலாளர் மற்றும் போலீசார் ஏ.டி.எம்., மையத்தை ஆய்வு செய்தனர்.
இந்த ஏ.டி.எம்., மையத்தின் கதவு பலமாதங்களாகவே திறந்த நிலையில் இருப்பதாகவும்,வேறு எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என தெரியவந்தது. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை தொடர்பு கொண்டதில் போன் நம்பர் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.