/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபருக்கு கத்திவெட்டு 15 பேருக்கு போலீஸ் வலை
/
வாலிபருக்கு கத்திவெட்டு 15 பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 13, 2024 05:36 AM
விருத்தாசலம்: வாலிபரை கத்தியால் தலையில் வெட்டி, இரும்பு பைப்பால் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த புதுகாலனியை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் விஜயபிரபாகரன், 24. இவர், அதே பகுதியை சேர்ந்த வீரபாண்டியன் என்பவரது நிலம் வழியாக அவரது வயலுக்கு செல்ல வேண்டும். நேற்று முன்தினம் வயலுக்கு சென்றபோது, அங்கு நின்றிருந்த வீரபாண்டியன், அவரது ஆதரவாளர்கள் மணிகண்டன் உட்பட 15 பேர் சேர்ந்து, முன்விரோதம் காரணமாக விஜயபிரபாகரன் தலையில் கத்தியால் வெட்டி, இரும்பு பைப்பால் தாக்கினர்.
படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயபிரபாகரன் புகாரின் பேரில், வீரபாண்டியன், மணிகண்டன் உட்பட 15 பேர் மீது விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிந்து, அனைவரையும் தேடி வருகின்றனர்.