/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : பிப் 23, 2025 05:40 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திடீரென விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயனை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சின்ன கண்டியங்குப்பத்தை சேர்ந்த செல்வக்குமாரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தாக்க முயன்றனர்.
விசாரணையில், நடியப்பட்டு கிராமத்தில் கூழாங்கற்கள் கடத்தல் தொடர்பாக செல்வக்குமார் போஸ்டர் ஒட்டியதாக கருதி, அவரை தாக்க முயன்றதும், இதற்கு காரணமான பா.ம.க., மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவர்களிடம் போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தினால், விருத்தாசலத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.