/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தென்னிந்திய கபடி போட்டியில் போலீஸ் அணி சாம்பியன்
/
தென்னிந்திய கபடி போட்டியில் போலீஸ் அணி சாம்பியன்
ADDED : ஜூலை 18, 2024 07:20 AM

கடலுார், : அகில இந்திய கபடி விளையாட்டு சம்மேளனம் சார்பில் தென்னிந்திய அளவிலான, 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு கபடி போட்டி திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரில் கடந்த வாரம் இரு நாட்கள் நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. கடலுார் மாவட்ட கபடி விளையாட்டு அணி சார்பில் காவல் துறை சிறப்பு எஸ்.ஐ., கதிரவன் தலைமையில் தலைமை காவலர்கள் ஞானமுருகன், குணசேகரன் உள்ளிட்ட 10 வீரர்கள் கொண்ட குழு பங்கேற்றது. போட்டியில் கடலுார் கபடிக் குழு முதலிடம் பெற்று 'சாம்பியன்' பட்டம் வென்றனர்.
தென்னிந்திய அளவிலான போட்டியில் கோப்பை வென்ற வீரர்களை, கடலூர் எஸ்.பி., ராஜாராம், பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.