ADDED : ஜூன் 28, 2026 08:20 PM
கடலுார்: கடலுாரில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 1 முதல் 6 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது.
இந்த முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் நடக்கின்றன.
மேலும் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள 1,611 மையங்களில் 6 வயதிற்குட்பட்ட 2,00,353 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கடலுார் பஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாமில் அமைச்சர் ராஜ்குமார் நேற்று காலை குழந்தைக்கு சொட்டு மருந்து போட்டு துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார், சுகதார அலுவலர் ராஜா, தாய்சேய் நல அலுவலர் சசிகலா, திட்ட அலுவலர் ராஜகணபதி, நகர் நல அலுவலர் பரிதாவணி, வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
