/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாதுரை பிறந்த நாள் அரசியல் கட்சிகள் மரியாதை
/
அண்ணாதுரை பிறந்த நாள் அரசியல் கட்சிகள் மரியாதை
ADDED : செப் 16, 2024 05:17 AM

கடலுார், : முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, கடலுாரில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க., சார்பில் மாநகர செயலாளர் ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பகுதி செயலாளர்கள் சலீம், இளையராஜா, நடராஜன், மாநகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வழக்கறிஞர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அவைத் தலைவர் குமார், மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்செல்வி ஆதிநாராயணன், கல்யாணி ரமேஷ், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், கந்தன், வினோத்ராஜ், பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க., சார்பில் கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சிவகுமார், மாவட்ட இணை செயலாளர் உமா, பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமன், ஒன்றிய செயலாளர்கள் அன்வார் பாஷா, சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.