/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தபால் அலுவலகம் முற்றுகை; 27 பேர் கைது
/
தபால் அலுவலகம் முற்றுகை; 27 பேர் கைது
ADDED : மார் 07, 2025 07:03 AM
கடலுார் : கடலுாரில் மும்மொழிக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், கடலுார் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் எதிரில் முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு ஜெகதீசன், வீரமணி முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் குளோப் கண்டன உரையாற்றினார்.
நிர்வாகிகள், அபினேஷ், சரண்ராஜ், ஸ்டாலின் உள்ளிட்ட 27 பேர், தலைமை தபால் நிலையம் முன்பு அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.