/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளியில் அஞ்சலக வங்கி சேவை : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
அரசு பள்ளியில் அஞ்சலக வங்கி சேவை : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
அரசு பள்ளியில் அஞ்சலக வங்கி சேவை : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
அரசு பள்ளியில் அஞ்சலக வங்கி சேவை : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 11, 2024 11:47 PM

கடலுார், : கடலுார் துறைமுகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலக வங்கி சேவையை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கடலுார் துறைமுகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அஞ்சலக வங்கி கணக்கு துவக்கம் மற்றும் ஆதார் பதிவு, புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அஞ்சலக வங்கி கணக்கு மற்றும் ஆதார் பதிவு சிறப்பு முகாமை துவக்கி வைத்தார். பின், பிளஸ் 2 மாணவிகள் 207 பேருக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் அஞ்சலக வங்கி கணக்கில் தலா 100 ரூபாய் வீதம் செலுத்த மொத்தம் 20,700 ரூபாய் ஊக்கத் தொகையை வழங்கி பேசினார்.
கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ், உதவி கண்காணிப்பாளர் ஆசைதம்பி, அஞ்சலக வங்கி மேலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.
விழாவில், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர் கவிதா ரகுராமன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர், உதவித் தலைமை ஆசிரியர் அறிவழகன், ஆசிரியர்கள் சுகிந்தரமணி, பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.