ADDED : ஜூன் 21, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் கோட்ட அஞ்சல் துறை சார்பில் சில்வர் பீச்சில் சிறப்பு யோகா விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சி நடந்தது.
உலக யோகா தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, யோகா பயிற்சி அளித்தார்.
பரபரப்பான பணிச்சூழலில் உடல் நலனையும், மன நலனையும் எவ்வாறு பேணிப் பாதுகாப்பது மற்றும் அன்றாட வாழ்வில் யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.
விழாவில், கடலுார் கோட்ட அஞ்சல் அதிகாரிகள், ஊழியர்கள் என, 100 பேர் பங்கேற்று மூச்சுப் பயிற்சி மற்றும் தியான பயிற்சி செய்தனர்.
