ADDED : மே 11, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
கடலுார்: மேல்பட்டாம்பாக்கம் ஏரியில் மண் எடுக்க அனுமதிக்க கோரி மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர். கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு; கடலுார் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலை நம்பி 7,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மண்பாண்ட தொழிலுக்கு தேவையான மண் எடுக்க மேல்பட்டாம்பாக்கம் ஏரியில் குறிப்பிட்ட பதிவெண் கொண்ட டிராக்டர் உரிமையாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும். மண் எடுக்க அனுமதியில்லாததால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
