/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
/
சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 20, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
இதையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மாலை 4:45 மணியளவில், முன் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவிய பொடி ஆகியவைகளால் அபிஷேகம், 5:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.
இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.